/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆலம்பரைக்குப்பத்தில் படப்பிடிப்பு மீனவர்களுக்கு இடையே தகராறு
/
ஆலம்பரைக்குப்பத்தில் படப்பிடிப்பு மீனவர்களுக்கு இடையே தகராறு
ஆலம்பரைக்குப்பத்தில் படப்பிடிப்பு மீனவர்களுக்கு இடையே தகராறு
ஆலம்பரைக்குப்பத்தில் படப்பிடிப்பு மீனவர்களுக்கு இடையே தகராறு
ADDED : பிப் 18, 2024 05:31 AM
செய்யூர்: செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலம்பரைக்குப்பம் கிராமத்தில், ஊத்துக்காட்டம்மன் பகுதி மற்றும் தண்டுமாரியம்மன் பகுதி உள்ளது.
இரண்டு பகுதியினர் இடையே, பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன், ஊத்துக்காட்டம்மன் பகுதியில் உள்ள ஆலம்பரைக்கோட்டை பகுதியில் திரைப்பட படப்பிடிப்பு எடுப்பதில் தகராறு ஏற்பட்டது.
அதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என, காவல் துறை சார்பாக ஆலம்பரைக்கோட்டை பகுதியில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம், ஊத்துக்காட்டம்மன் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், 38, என்பவர், நான்கு நபர்களை ஆலம்பரைக்கோட்டை பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த தண்டுமாரியம்மன் பகுதியைச் சேர்ந்த ஜலேந்திரன், 45, என்பவர், சம்பவ இடத்திற்கு சென்று, ஏன் ஷூட்டிங் எடுக்க அனுமதித்தாய் என, ரஞ்சித்திடம் கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து, சூணாம்பேடு போலீசார் வழக்கு பதிந்து, தகராறு குறித்து விசாரித்து வருகின்றனர்.