/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செம்பூரில் குடிநீர் பங்கீடு செய்வதில் இரு தரப்பினரிடையே கருத்து மோதல்
/
செம்பூரில் குடிநீர் பங்கீடு செய்வதில் இரு தரப்பினரிடையே கருத்து மோதல்
செம்பூரில் குடிநீர் பங்கீடு செய்வதில் இரு தரப்பினரிடையே கருத்து மோதல்
செம்பூரில் குடிநீர் பங்கீடு செய்வதில் இரு தரப்பினரிடையே கருத்து மோதல்
ADDED : ஜன 12, 2024 11:01 PM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே செம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
செம்பூர் ஊராட்சிக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 60,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு, பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதில் இருந்து தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.
அதிக படியான அழுத்தம் காரணமாக தண்ணீர் ஏற்றும் பைப்பில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டதால்,
காலனி பகுதி மக்களுக்கு தனியாக புதிதாக குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காலனி பகுதி மக்கள், பாலாற்றில் இருந்து வரும் குடிநீர் தங்கள் பகுதிக்கும் வினியோகம் செய்யவேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், அதிகாரிகள் பாலாற்றில் இருந்து வரும் குடிநீரில் புதிய இணைப்பு ஏற்படுத்த முயன்றபோது, பாலாற்று குடிநீர் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்குமேலாகிறது.
மக்கள் தொகை பெருக்கம் காரணமாக தற்போது பாலாற்றில் இருந்து வரும் தண்ணீர் கிராம மக்களுக்கு போதுமானதாக இல்லை.
மேலும் குடிநீர் ஏற்றும் பைப்பில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆகையால், மேலும் கூடுதலாக இணைப்பு ஏற்படுத்தினால், அழுத்தம் தாங்காமல் பைப் சேதமடைந்து மொத்த கிராமத்திற்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகையால் சேதமடைந்த பைப்களை சீரமைத்து பின் புதிய இணைப்பு ஏற்படுத்துங்கள். தற்போது புதிய இணைப்பு ஏற்படுத்த வேண்டாம் என கிராம மக்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், செய்யூர் வட்டாட்சியர் சரவணன், செய்யூர் எம்.எல்.ஏ. பாபு ஆகியோர் நேரில் சென்று கிராம மக்களிடம் பேச்சு நடத்தி சேதமடைந்த பைப்புகளை விரைவில் சீரமைக்கப்படும் என தெரிவித்து புதிய இணைப்பு ஏற்படுத்த அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.