/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா விற்ற பணம் பிரிப்பதில் தகராறு: வாலிபர் படு கொலை
/
கஞ்சா விற்ற பணம் பிரிப்பதில் தகராறு: வாலிபர் படு கொலை
கஞ்சா விற்ற பணம் பிரிப்பதில் தகராறு: வாலிபர் படு கொலை
கஞ்சா விற்ற பணம் பிரிப்பதில் தகராறு: வாலிபர் படு கொலை
ADDED : ஜன 16, 2025 09:49 PM
மறைமலை நகர்:திருக்கச்சூர் சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக மறைமலை நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் அருகில் இருந்த 'யமஹா' எஃப் இசட்' டூ -- வீலரின் பதிவு எண் வைத்து நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த களியப்பேட்டை கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மகன் சரவணன், 20 என, தெரிந்தது.
போலீசார் கூறியதாவது:
சரவணனுக்கும் சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு கிராமத்தை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய உடைய பிரவீன், 26 என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதில் இருவருக்கும் பணம் பிரிப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. பிரவீன், சரவணனை நேற்று முன்தினம் இரவு தெள்ளிமேடு அருகில் உள்ள செட்டி புண்ணியம் ஏரிக்கரைக்கு வருமாறு கூறி உள்ளார்.
சரவணன் தன் நண்பர்கள் சிலருடன் சென்றார். அங்கு பிரவீன் மற்றும் அவர்களது நண்பர்களுடன் மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பிரவீன் தன் நண்பர்களுடன் சேர்ந்து சரவணனை சரமாரியாக பச்சை மட்டையால் தாக்கினர். இதில் சரவணன் உயிரிழந்தார்.
இதனிடையே சரவணனின் உடலை டூ- - வீலரில் வைத்து ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை ஓரம் வீசி விட்டு டூ- - வீலரை அருகில் நிறுத்தி விட்டு பிரவீன் மற்றும் அவருடன் வந்தவர்கள் தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேரை கைது செய்து விசாரிக்கிறோம். பிரவீனை தேடி வருகின்றோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.