/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாணவியை காதலிப்பதில் தகராறு பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து
/
மாணவியை காதலிப்பதில் தகராறு பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து
மாணவியை காதலிப்பதில் தகராறு பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து
மாணவியை காதலிப்பதில் தகராறு பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து
ADDED : அக் 21, 2024 01:08 AM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர், தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர், உடன் படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இதே மாணவியை, தற்போது பாலிடெக்னிக் படிக்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் காதலித்துள்ளார்.
இந்நிலையில், தான் காதலிக்கும் பெண்ணுடன் 17 வயது சிறுவன் சுற்றித் திரிவதை அறிந்து, பாலிடெக்னிக் மாணவர் ஆத்திரமடைந்து உள்ளார். இதனால், தன் நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய 17 வயது சிறுவனை, வழிமறித்து மிரட்டியுள்ளார்.
திடீரென, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுவனின் தொடை, கை, கழுத்து பகுதிகளில் குத்திவிட்டு, நண்பர்களுடன் தப்பினார்.
இதைப் பார்த்த அங்கிருந்தோர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கிளாம்பாக்கம் போலீசார், காயமடைந்த சிறுவனை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்படி, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட பாலிடெக்னிக் மாணவர், அவரது நண்பர்கள் என, ஆறு பேரை கைது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.