/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயன்பாடில்லாத குடிநீர் மையத்தால் இடையூறு
/
பயன்பாடில்லாத குடிநீர் மையத்தால் இடையூறு
ADDED : மார் 09, 2024 10:44 PM

திருப்போரூர்::ருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி பேருந்து நிலையம் உள்ளது. இங்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் வருகின்றனர்.
இங்கிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, தி.நகர், பிராட்வே, கோயம்பேடு உட்பட பல இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் 'அம்மா' குடிநீர் விற்பனை மையம் திறக்கப்பட்டது. இங்கு, 1 லிட்டர் குடிநீர் பாட்டிலை, 10 ரூபாய்க்கு, மலிவான விலைக்கு வாங்கி பொதுமக்கள் பயன்பெற்றனர்.
ஆனால், அக்., 2019 முதல் மையம் மூடப்பட்டு, தற்போது வரை பயன்பாடின்றி வீணாகி வருகிறது. இதனால், பேருந்து திரும்பி செல்வதற்கும், பயணியருக்கும் இடையூறாக உள்ளது.எனவே, பயன்பாட்டில் இல்லாமல் இடையூறாக உள்ள அம்மா குடிநீர் மையத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

