/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குண்ணவாக்கம் ஏரிக்கரை சாலை பணிகள் துவங்காததால் அதிருப்தி
/
குண்ணவாக்கம் ஏரிக்கரை சாலை பணிகள் துவங்காததால் அதிருப்தி
குண்ணவாக்கம் ஏரிக்கரை சாலை பணிகள் துவங்காததால் அதிருப்தி
குண்ணவாக்கம் ஏரிக்கரை சாலை பணிகள் துவங்காததால் அதிருப்தி
ADDED : டிச 21, 2024 11:38 PM

மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சியில், குண்ணவாக்கம் -- அனுமந்தை ஏரிக்கரை சாலை, 2.கி.மீ., துாரம் உடையது.
இந்த சாலை வழியாக குண்ணவாக்கம், ஈச்சக்கரணை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இருசக்கர வாகனங்கள் வாயிலாக மகேந்திரா சிட்டி பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு, தினமும் பணிக்கு சென்று வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலை சிதிலமடைந்து, தற்போது குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர்.
இதையடுத்து, புதிய சாலை அமைக்க 8 மாதங்களுக்கு முன் பணிகள் துவக்கப்பட்டு, சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு, ஏரிக்கரை ஓரம் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன.
ஆனால், ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையில் பணிகள் துவங்காததால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையை அதிக அளவில் இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி, பணிக்குச் செல்கின்றனர். சாலையில் கலைத்து வைக்கப்பட்டு உள்ள ஜல்லி கற்கள் குத்தி, வாகனங்களின் 'டயர்'கள் அடிக்கடி பஞ்சராவதால், பணிக்கு செல்வதில் தடை ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, வீண் அலைச்சல் ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி சிறு சிறு விபத்துக்களும் நடைபெறுகின்றன. எனவே, இந்த சாலை பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.