/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழையால் சாலை சேதம் சீரமைக்காததால் அதிருப்தி
/
மழையால் சாலை சேதம் சீரமைக்காததால் அதிருப்தி
ADDED : டிச 04, 2024 01:01 AM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில், ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் திருப்போரூர் -- நெம்மேலி சாலை உள்ளது.
இச்சாலையின் இடையே, பகிங்ஹாம் கால்வாயில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., சாலை சார்ந்த சுற்றுவட்டார கிராம மக்கள், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், காலையும், மாலையும் சென்று வருகின்றன.
தற்போது பெய்த மழையால், சாலை சேதமடைந்து உள்ளது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.