sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிங்கபெருமாள்கோவில் புது காவல் நிலையம் திட்டத்தை கிடப்பில் போட்டதால் அதிருப்தி

/

சிங்கபெருமாள்கோவில் புது காவல் நிலையம் திட்டத்தை கிடப்பில் போட்டதால் அதிருப்தி

சிங்கபெருமாள்கோவில் புது காவல் நிலையம் திட்டத்தை கிடப்பில் போட்டதால் அதிருப்தி

சிங்கபெருமாள்கோவில் புது காவல் நிலையம் திட்டத்தை கிடப்பில் போட்டதால் அதிருப்தி


ADDED : ஜன 29, 2025 07:01 PM

Google News

ADDED : ஜன 29, 2025 07:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள் கோவில்:'சிங்கபெருமாள் கோவில் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும்' என, தமிழக அரசு, கடந்த 2023 மார்ச் மாதம் அறிவித்த நிலையில், இதுவரை புதிய காவல் நிலையம் அமைக்கப்படாமல், திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில், வளர்ந்து வரும் முக்கியமான நகரங்களில் சிங்கபெருமாள் கோவில் முதன்மையானது. கடந்த 15 ஆண்டுகளில் சிங்கபெருமாள் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளன.

இங்கு கோவில்கள், வங்கிகள், தனியார் மருத்துவமனைகள், ரயில் நிலையம், அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளிட்டவை உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் இங்கு வாடகைக்கு தங்கி மறைமலைநகர், மகேந்திரா சிட்டி, ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

சிங்கபெருமாள் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள், தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் கட்டுப்பாட்டில் உள்ள மறைமலைநகர் காவல் நிலைய எல்லையில் உள்ளன.

இதை தனியாக பிரித்து, சிங்கபெருமாள் கோவிலில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, 2023 மார்ச் மாதம், புதிய காவல் நிலையம் அமைக்க, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையில், இதுவரை காவல் நிலையம் அமைக்கும் பணிகள் துவக்கப்படவில்லை.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சிங்கபெருமாள் கோவில் பகுதி திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள பகுதியில், முக்கிய சந்திப்புகளில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.

மேலும் இருசக்கர வாகனங்கள் திருட்டு, மொபைல் போன் திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவை இரவு நேரங்களில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

சுற்றியுள்ள கிராமங்களில் பரவலாக கஞ்சா விற்பனையும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக சரவணன் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.

அதே போல கடந்த 15 ஆண்டுகளில், தி.மு.க., - அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் உட்பட, 25க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். மறைமலைநகர் காவல் நிலைய எல்லையில், 2022ம் ஆண்டு 5 கொலைகளும், 2023ல் ஏழு கொலைகளும், 2024 மற்றும் 2025ல் தலா ஒரு கொலையும் நடைபெற்று உள்ளன.

இப்பகுதி மக்கள் குற்றச் சம்பவம், பாதுகாப்பு குறித்து புகார் தெரிவிக்க, 7 கி.மீ., துாரம் சென்று மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டி உள்ளது.

இதனால், வீண் அலைச்சலும் ஏற்பட்டு வருகிறது. சிங்கபெருமாள் கோவிலில், ஐந்திற்கும் மேற்பட்ட அரசு கட்டடங்கள் உரிய பராமரிப்பு இல்லாமல், வீணாகி வருகின்றன.

இவற்றில் ஏதேனும் ஒரு கட்டடத்தை காவல் நிலையம் தற்காலிகமாக செயல்படும் வகையில் மாற்றி நடவடிக்கை எடுக்க, காவல் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

16 கி.மீ., துாரம் பயணம்


அனுமந்தபுரம் ஊராட்சியில் அனுமந்தபுரம், சந்தகுப்பம், மேட்டுப்பாளையம், தர்காஸ் உள்ளிட்டவை மறைமலைநகர் காவல் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ளன. இதே ஊராட்சியைச் சேர்ந்த தாசரி குப்பம், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த கிராம மக்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க 16 கி.மீ., துாரம் பயணம் செய்து காவல் நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதே போல செட்டிப்புண்ணியம் கிராம மக்களும், 13 கி.மீ., துாரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.



புது காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்கள்


சிங்கபெருமாள் கோவில், விஞ்சியம்பாக்கம், பாரேரி, திருத்தேரி, செட்டிப்புண்ணியம், திருக்கச்சூர், கருநிலம், கொண்டமங்கலம், அனுமந்தபுரம், காச்சேரிமங்கலம், மெல்ரோசாபுரம் உள்ளிட்ட பகுதிகள்.








      Dinamalar
      Follow us