/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரங்கா நகர் குளத்தை சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் அதிருப்தி
/
ரங்கா நகர் குளத்தை சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் அதிருப்தி
ரங்கா நகர் குளத்தை சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் அதிருப்தி
ரங்கா நகர் குளத்தை சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் அதிருப்தி
ADDED : அக் 07, 2024 02:07 AM

முடிச்சூர்:முடிச்சூர் ஊராட்சியில், சி.எம்.டி.ஏ., நிதி 4.25 கோடி ரூபாய் செலவில், ரங்கா நகர் குளத்தை சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மழைக்கு முன் பணியை முடிக்காதது, அப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட முடிச்சூர் ஊராட்சியில், ரங்கா நகரில் பழமையான குளம் உள்ளது. பராமரிப்பில்லாமல் குப்பை, பிளாஸ்டிக் தேங்கி நாசமான இக்குளத்தை சீரமைத்து சுற்றுச்சுவர், நடைபாதை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, சி.எம்.டி.ஏ., நிதி, 4.25 கோடி ரூபாய் செலவில், இக்குளத்தை சீரமைக்கும் பணி, 2024 மார்ச் மாதம் நடந்தது.
குளத்தை துார்வாரி ஆழப்படுத்துதல், நடைபாதை, சிறுவர் விளையாட்டு பூங்கா, முதியோருக்கான உடற்பயிற்சி கருவிகள், வாகன நிறுத்தம், இருக்கை, 'பயோ டாய்லெட்' மற்றும் மிதக்கும் நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
ஆனால், பணி துவங்கியதில் இருந்து ஆமை வேகத்திலேயே நடந்து வருகிறது.
இதுவரை, 20 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பூமி பூஜை நடந்து ஆறு மாதங்கள் ஆகிய நிலையில், 20 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இப்பிரச்னையில் உயர் அதிகாரிகள் தலையிட்டு, பணியை வேகப்படுத்த உத்தரவிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

