/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாவட்டம் முழுதும் 'சிசிடிவி' கேமரா ரவுடிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
/
மாவட்டம் முழுதும் 'சிசிடிவி' கேமரா ரவுடிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
மாவட்டம் முழுதும் 'சிசிடிவி' கேமரா ரவுடிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
மாவட்டம் முழுதும் 'சிசிடிவி' கேமரா ரவுடிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
ADDED : செப் 27, 2024 12:04 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட காவல் மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய துணை கண்காணிப்பாளர்கள் அலுவலகங்கள் உள்ளன.
இதன் கட்டுப்பாட்டில், 20 காவல் நிலையங்கள், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில், அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் உள்ளன.
செங்கல்பட்டு, மதுராந்தகம் நகராட்சிகள், அச்சிறுபாக்கம், கருங்குழி, இடைக்கழிநாடு, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர் பேரூராட்சிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.
இந்த பகுதிகளில், சமூக விரோத செயல்கள், கொலை, வழிப்பறி, கொள்ளை, திருட்டு மற்றும் சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அவற்றை கண்காணித்து கட்டுப்படுத்த, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், கண்காணிப்பு கேமராக்ககள் பொருத்த வேண்டும் என, எஸ்.பி., சாய் பிரணீத் உத்தரவிட்டார்.
இதையடுத்து, கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியில், உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக, செங்கல்பட்டு நகராட்சி மாவட்ட தலைநகராக உள்ளதால், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் நடமாட்டம், வாகனங்கள் திருட்டு, சாலை விபத்து உள்ளிட்ட குற்றச்சம்பங்களை கண்காணிக்க, கண்காணிப்பு கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்பின், பழைய, புதிய பேருந்து நிலையங்கள், சென்னை - செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலம், காஞ்சிபுரம் புறவழிச்சாலை, ராமபாளையம் ஆகிய பகுதிகளில், 35 நவீன கண்காணிப்பு கேமராக்கள், சில தினங்களுக்கு முன் அமைக்கப்பட்டன.
இந்த கேமராக்கள், கேபிள் வாயிலாக இணைக்கப்பட்டு, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
ராட்டினங்கிணறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், கேபிள் வாயிலாக இணைக்கப்பட்டு, செங்கல்பட்டு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், மதுராந்தகம், மாமல்லபுரம் காவல் துணை கோட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.