/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய நெடுஞ்சாலை ஓரம் கழிவுநீர் வெளியேற்றும் லாரிகளால் சீர்கேடு
/
தேசிய நெடுஞ்சாலை ஓரம் கழிவுநீர் வெளியேற்றும் லாரிகளால் சீர்கேடு
தேசிய நெடுஞ்சாலை ஓரம் கழிவுநீர் வெளியேற்றும் லாரிகளால் சீர்கேடு
தேசிய நெடுஞ்சாலை ஓரம் கழிவுநீர் வெளியேற்றும் லாரிகளால் சீர்கேடு
ADDED : நவ 17, 2025 07:49 AM

மதுராந்தகம்: சோத்துப்பாக்கம் -- ஊனமலை இடையே தேசிய நெடுஞ்சாலை ஓரம், கழிவுநீரை வெளியேற்றும் 'டேங்கர்' லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளன.
இச்சாலையின் இருபுறமும், உணவகங்கள் அதிக அளவில் உள்ளது.
இந்த உணவகங்கள், தங்கும் விடுதிகளிலிருந்து எடுக்கப்படும் கழிவுநீரை, கருங்குழியில் செயல்படும் கசடு கழிவு மேலாண்மை நிலையம் மற்றும் மேல்மருவத்துாரில் உள்ள கழிவு மேலாண்மை நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால், இங்கு கழிவுநீரை எடுக்கும் டேங்கர் லாரிகள், கழிவுநீர் மேலாண்மை நிலையத்திற்கு கொண்டு செல்லாமல், சோத்துப்பாக்கம் அடுத்த ஊனமலை அருகே, சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர்.
இதனால், தேசிய நெடுஞ்சாலை ஓரம் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
மேலும், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் இந்த கழிவுநீரை குடிப்பதால் உயிரிழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, பொது இடங்களில் திறந்தவெளியில் கழிவுநீரை வெளியேற்றும் கழிவுநீர் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

