/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் கழிவுநீர் கொட்டப்படுவதால் சீர்கேடு
/
சாலையோரம் கழிவுநீர் கொட்டப்படுவதால் சீர்கேடு
ADDED : ஏப் 17, 2025 01:03 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பகுதிகளில் கழிவுநீர் லாரிகளில் கொண்டு செல்லப்படும், கழிவு நீரை, சாலை ஓரம் கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அச்சிறுபாக்கம் அடுத்த தேன்பாக்கம் பகுதியில் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
அச்சிறுபாக்கத்தில், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள உணவகங்களில் இருந்து சேகரமாகும் செப்டிக் டேங்க் கழிவுகளை எடுத்துச் செல்லும், தனியார் கழிவுநீர் ஊர்திகள், கழிவு நீரை தேசிய நெடுஞ்சாலை ஓரம், கொட்டி செல்கின்றனர்.
இந்த பகுதியில், தொடர்ந்து, இரவு நேரங்களில், சாலை ஓரமாக லாரியை நிறுத்தி விட்டு, கழிவுநீரை வெளியேற்றி செல்கின்றனர்.
இதனால், தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணியர், மூச்சு அவதிக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறான செயல்களில் ஈடுபடும், கழிவு நீர் ஊர்திகளை கண்டறிந்து, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.