/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழைய பஸ் நிலையம் அருகில் பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை
/
பழைய பஸ் நிலையம் அருகில் பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை
பழைய பஸ் நிலையம் அருகில் பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை
பழைய பஸ் நிலையம் அருகில் பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை
ADDED : ஜன 29, 2024 04:05 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு பேருந்து நிலையம் பின்புறம், துாய்மை இந்தியா -2.0 திட்டத்தின் கீழ், 2022 -- 23 நிதி ஆண்டில், 1.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஆண்கள் சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டது.
இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து பூட்டியே கிடப்பதால், கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, அந்த வழியாக செல்வோர் சாலை ஓரங்களிலும், மழைநீர் கால்வாய்களில் திறந்த வெளியிலும் சிறுநீர் கழிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும், கழிப்பறை அருகில் அமைக்கப்பட்ட செப்டிக் டேங்க் திறந்த நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் அதில் குப்பை கொட்டி வருகின்றனர்.
அருகிலேயே பள்ளி வளாகம் மற்றும் குடியிருப்புகள் உள்ள பகுதியில், திறந்த நிலையில் செப்டிக் டேங்க் உள்ளதால், குழந்தைகள் அதில் விழுந்து பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு, திறந்த நிலையில் உள்ள செப்டிக் டேங்க்கை மூடவும், கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.