/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டிவிஷன் கிரிக்கெட் லீக் சென்னை பல்கலை வெற்றி
/
டிவிஷன் கிரிக்கெட் லீக் சென்னை பல்கலை வெற்றி
ADDED : ஜன 20, 2025 11:41 PM
சென்னை,டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, சென்னைப் பல்கலை யூனியன் அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில், கோஹினுார் லெவன் அணியை வீழ்த்தியது.
டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நடக்கின்றன.
அந்த வகையில், ஐந்தாவது டிவிஷன், 'பி' மண்டல போட்டி, 17 ஆட்டங்கள் நேற்று முன்தினம் நடக்க இருந்தன. மழையால், இரண்டு போட்டிகள் மட்டுமே நடந்தது.
முதல் போட்டியில், சென்னைப் பல்கலை யூனியன் மற்றும் கோஹினுார் லெவன் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த, கோஹினுார் லெவன் அணி, 38 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 157 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, சென்னைப் பல்கலை யூனியன் அணி, 37.3 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 158 ரன்களை அடித்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், யுனிவர்சல் கிளப் மற்றும் நேதாஜி சி.சி., அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய யுனிவர்சல் கிளப் அணி, 47.3 ஓவர்களில், ஆல் அவுட் ஆகி, 169 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, நேதாஜி சி.சி., அணி, 39.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி போராடி, 162 ரன்களை அடித்து தோல்வியடைந்தது.
ஏழு ரன்கள் வித்தியாசத்தில், யுனிவர்சல் கிளப் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்கின்றன.

