/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை செங்கல்பட்டில் துவக்கம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை செங்கல்பட்டில் துவக்கம்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை செங்கல்பட்டில் துவக்கம்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை செங்கல்பட்டில் துவக்கம்
ADDED : ஜூலை 02, 2025 02:11 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை, நேற்று துவங்கியது.
இதுகுறித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான அன்பரசன், செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முழக்கத்தை முன்வைத்து, தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையை, தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று துவக்கி வைத்தார். இது, 45 நாட்களுக்கு நடக்கிறது. தமிழகம் முழுதும் இந்த உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது.
பா.ஜ., அரசு ஹிந்தி திணிப்பு, கல்வி நிதி நிறுத்தி வைப்பு, 100 நாள் வேலைக்கு நிதி தராதது, மாநில உரிமைகளை பறிப்பது, கீழடியின் தொன்மையை மறுப்பது என, பல்வேறு அநீதிகளை தமிழகத்திற்கு இழைக்கிறது.
தமிழகத்தில் 2ம் தேதி, தமிழ்நாடு முழுதும், ஓரணியில் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. அந்த வகையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், பல்லாவரம் கன்டோன்மென்ட் பேருந்து நிலையம் அருகில், மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் பேசுகின்றனர்.
இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, மறைமலை நகர் நகரமன்ற தலைவர் சண்முகம், செங்கல்பட்டு நகர செயலர் நரேந்திரன், நகரமன்ற துணைத்தலைவர் அன்புச்செல்வன், காட்டாங்கொளத்துார் ஒன்றிய செயலர் சந்தானம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.