/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
100 நாள் வேலைக்கு ரூ.4,034 கோடி வழங்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
100 நாள் வேலைக்கு ரூ.4,034 கோடி வழங்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலைக்கு ரூ.4,034 கோடி வழங்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலைக்கு ரூ.4,034 கோடி வழங்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 30, 2025 01:02 AM

தி.மு.க., சார்பில் கேளம்பாக்கம் பகுதியில்
தமிழகத்திற்கு, 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு அளிக்க வேண்டிய 4,034 கோடி ரூபாய் நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து நேற்று, தி.மு.க., சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., திருப்போரூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில், மத்திய அரசை கண்டித்து, கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் பங்கேற்றார். தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய 4,034 கோடி ரூபாய் நிதியை உடனே வழங்க வேண்டுமென, வலியுறுத்தப்பட்டது. இதில், தி.மு.க.,வினர் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது மண்வெட்டி, பாண்டு உள்ளிட்ட பொருட்களுடன் நுாதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* அச்சிறுபாக்கம்
அச்சிறுபாக்கம் ஒன்றியம், வேடந்தாங்கல் ஊராட்சியில் மொறப்பாக்கம், தண்டரை, பெரும்பாக்கம், கூடலுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தி.மு.க.,வினர், மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* சிங்கபெருமாள்கோவில்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவில் ஜி.எஸ்.டி., சாலையில், மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், காட்டாங்கொளத்துார் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் சந்தானம் தலைமை வகித்தார்.
இதில், சிங்கபெருமாள்கோவில், வெங்கடாபுரம், ஆப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தி.மு.க.,வினர் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பதாகைகளை ஏந்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
* ஊரப்பாக்கம்
ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று காலை 9:30 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், காட்டாங்கொளத்துார் வடக்கு ஒன்றிய தி.மு.க.,வினர் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
45 நிமிடங்கள் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் மற்றும் 50க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
* செங்கல்பட்டு
மலையடி வேண்பாக்கத்தில், தி.மு.க., சார்பில், ஒன்றிய பா.ஜ., அரசை கண்டித்து, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
காட்டாங்கொளத்துார் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய அவைத்தலைவர் திருமலை தலைமை வகித்தார். இதில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- நமது நிருபர் குழு -