/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மலிவு விலை பட்டாசு வாங்காதீர் தீயணைப்பு துறையினர் அறிவுரை
/
மலிவு விலை பட்டாசு வாங்காதீர் தீயணைப்பு துறையினர் அறிவுரை
மலிவு விலை பட்டாசு வாங்காதீர் தீயணைப்பு துறையினர் அறிவுரை
மலிவு விலை பட்டாசு வாங்காதீர் தீயணைப்பு துறையினர் அறிவுரை
ADDED : அக் 26, 2024 01:19 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், தீயணைப்பு வீரர்கள், மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது ரமேஷ்பாபு கூறியதாவது:
பட்டாசிற்கு நீளமான ஊதுவத்தியில் தீ வைக்கவேண்டும். முகம் வேறு திசையை நோக்கியிருக்க வேண்டும். சிறிய ஊதுபத்தியை தவிர்க்க வேண்டும்.
பருத்தி ஆடையை உடுத்த வேண்டும். நைலான் ஆடையை தவிர்க்க வேண்டும். வீடு, வைக்கோல், காஸ் கிடங்கு உள்ளிட்டவற்றின் அருகில், ராக்கெட் வெடிக்கக் கூடாது.
தீப்புண் ஏற்பட்டால், குளிர்ந்த நீர் ஊற்றி, மெல்லிய துணியில் மூடி, டாக்டரிடம் செல்ல வேண்டும். தீக்காயத்தில் இங்க், காப்பித்துாள் போன்றதை தடவக்கூடாது.
எரிந்த பட்டாசை, உலர்ந்த மண்ணில் அல்லது நீரில் மூழ்கச் செய்ய வேண்டும். அவற்றை காலில் மிதிக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும்போது, காலில் செருப்பு அணிவதும் அவசியம்.
மலிவு விலையில் அதிக பட்டாசுகள் வாங்கி, ஆபத்தில் சிக்காமல், தரமான பட்டாசை மட்டுமே வாங்க வேண்டும். அவசர உதவிக்கு, 112 எண்ணில் தீயணைப்புத் துறையினரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், பட்டாசை பாதுகாப்பாக வெடிப்பது, தீ விபத்து ஏற்பட்டால் கோணிப்பையால் மூடி அணைப்பது, தீயணைப்பு சாதனங்கள், வாகனம் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து, வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.