/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் கழிப்பறையில் கதவுகள் அமைப்பு
/
மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் கழிப்பறையில் கதவுகள் அமைப்பு
மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் கழிப்பறையில் கதவுகள் அமைப்பு
மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் கழிப்பறையில் கதவுகள் அமைப்பு
ADDED : ஜன 25, 2025 12:09 AM

மதுராந்தகம், மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து சூனாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழி நாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாள் தோறும் 5,000க்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.
பேருந்து பயனியரின் நலன் கருதி, தற்காலிக பயன்பாட்டிற்காக, பெண்கள் கழிப்பறை மற்றும் ஆண்கள் கழிப்பறை அமைக்கப்பட்டது.
இதில், பெண்கள் கழிப்பறையில், இரண்டு கழிப்பறையின் கதவுகள் மாயமானது. இதனால், பெண் பயணியர் கழிப்பறை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
அதிகாரிகள், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதை அடுத்து, நகராட்சி நிர்வாகத்தினர், நேற்று, பெண்கள் கழிப்பறையில் கதவுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.