sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையோரத்தில் விற்கப்படும் பதநீரின் தரத்தில்...சந்தேகம்:ரசாயனம் கலப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

/

சாலையோரத்தில் விற்கப்படும் பதநீரின் தரத்தில்...சந்தேகம்:ரசாயனம் கலப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சாலையோரத்தில் விற்கப்படும் பதநீரின் தரத்தில்...சந்தேகம்:ரசாயனம் கலப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சாலையோரத்தில் விற்கப்படும் பதநீரின் தரத்தில்...சந்தேகம்:ரசாயனம் கலப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு


ADDED : ஏப் 24, 2025 01:33 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட சாலையோரங்களில், பதநீர் என்ற பெயரில் விற்கப்படும் பானம், பனை மரத்திலிருந்து பெறப்படும் உண்மையான பதநீரா அல்லது ரசாயன கலவையா என, சமூக ஆர்வலர்கள் சந்தேகப்படுகின்றனர். உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், இதுகுறித்து ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், மக்களின் தாகம் தீர்க்க சாலையோர குளிர்பானக் கடைகள், பழச்சாறு கடைகள் போட்டி போட்டு, புதிது புதிதாக முளைத்து வருகின்றன.

இந்த வரிசையில் பதநீர், நுங்கு ஆகிய பனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் சாலையோர கடைகளும், கிழக்கு கடற்கரை சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார்- கேளம்பாக்கம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் புதிதாக முளைத்துள்ளன.

இந்த கடைகளில், பதநீர் என்ற பெயரில் விற்கப்படும் பானம், பனை மரத்திலிருந்து பெறப்படும் உண்மையான பதநீரா அல்லது ரசாயன கலவையா என்ற சந்தேகம் இருப்பதாக, பல்வேறு தரப்பிலிருந்து கேள்வி எழுந்துள்ளது.

பனை மரத்தின் பாளைகளைச் சீவி, அதன் நுனியில் வடியும் திரவத்தை, சுண்ணாம்பு தடவிய பானைகளில் சேகரிக்கும் போது, அந்த பானம் மனதை வசீகரிக்கும் வாசத்துடன், இனிப்புச் சுவையுள்ள திரவமாக மாறுகிறது. இதுவே பதநீர் என அழைக்கப்படுகிறது.

ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தின் சாலையோர கடைகளில், பெரிய அலுமினிய பாத்திரங்களில் பதநீர் என்ற பெயரில் விற்கப்படும் பானத்தில், அசல் பதநீரின் சுவையும், வாசமும் இல்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, பதநீர் என்ற பெயரில் விற்கப்படும் இந்த பானத்தில், ரசாயனம் கலந்திருக்க வாய்ப்புண்டு. இதை அருந்துவதால், உடல் நலனும் பாதிக்கப்படலாம்.

உண்மையான பதநீரில் புரதம், சுக்ரோஸ், குளூக்கோஸ், உலோக உப்புகள், தையாமின், ரிபோபிளேவின், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கோபால்ட், நிக்கல், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் உண்டு.

இதனால், பனை மரத்திலிருந்து பெறப்படும் உண்மையான பதநீர், அருந்திய சில நிமிடங்களில் புத்துணர்ச்சியைத் தரும்.

தவிர, வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.

பதநீருடன் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், கால்சியம் சத்து மிகுதியாக உள்ளது. இது, எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

ஆனால், செங்கல்பட்டு மாவட்ட சாலையோர கடைகளில் லிட்டர் 100 ரூபாய்க்கு விற்கப்படும் பதநீரில் சுவையும், வாசமும் மட்டுமே உள்ளது. உண்மையான பதநீரில் கிடைக்கும் புத்துணர்ச்சி இல்லை.

தவிர, அருந்திய சில நிமிடங்களில் ஒவ்வாமையும் வருவதாக கூறப்படுகிறது. உண்மையான பதநீர் எந்த சுவையில் இருக்கும், அதிலிருந்து எந்த மாதிரியான வாசம் வரும் என்பதை துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களே 100 சதவீதம் அறிவர்.

மாறாக, இங்குள்ளோரில் 95 சதவீதம் நபர்களுக்கு, பதநீரின் அசல் சுவை, மனம் குறித்து தெரியாது.

அதே வேளையில், பதநீர் பருகினால், அது உடலுக்கு நல்லது என்ற நம்பிக்கை மட்டும் இங்கு வசிக்கும் 100 சதவீத மக்களிடமும் உள்ளது. இந்த நம்பிக்கையை வைத்தே, இதுபோன்ற சாலையோர பதநீர் கடைகள் பெருகி வருகின்றன. எனவே, இதுகுறித்து, உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் பனை ஏறும் தொழிலாளிகள் மிகக் குறைவு, பனை தொழிலுக்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால், பதநீர் மட்டும் அதிக அளவில் விற்கப்படுகிறது. இது எப்படி சாத்தியம்?

காலை வேளையில், சரக்கு வாகனம் வாயிலாக பெரிய பீப்பாயில் பதநீர் கலவை கொண்டுவரப்பட்டு, சாலையோர கடைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்த சரக்கு வாகனம் எங்கிருந்து பதநீரை கொண்டு வருகிறது என்பது மர்மமாக உள்ளது. இதை விற்பனை செய்வோரில் பலர், தென்மாவடங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

உண்மையான பதநீர், நான்கு மணி நேரத்திற்குப் பின், கெட்டுப்போகும். ஆனால், சாலையோரங்களில் விற்கப்படும் இந்த பதநீர் கெட்டுப்போகாமல் அப்படியே உள்ளது.

எனவே, உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள், செங்கல்பட்டு மாவட்ட சாலையோரங்களில் விற்கப்படும் பதநீர், உண்மையில் பனைமரத்திலிருந்து பெறப்பட்டதா அல்லது ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்டதா என ஆய்வு செய்ய வேண்டும்.

இது ரசாயனம் கலந்த பானம் என்பது தெரிந்தால், இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us