/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துார்ந்துபோன வடிகால்வாய்கள் தெருக்களில் தேங்கும் மழைநீர்
/
துார்ந்துபோன வடிகால்வாய்கள் தெருக்களில் தேங்கும் மழைநீர்
துார்ந்துபோன வடிகால்வாய்கள் தெருக்களில் தேங்கும் மழைநீர்
துார்ந்துபோன வடிகால்வாய்கள் தெருக்களில் தேங்கும் மழைநீர்
ADDED : நவ 04, 2024 02:57 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவிலுக்கு உட்பட்ட ஜெ.ஜெ., நகர், பிள்ளையார் கோவில் தெரு, கெங்கையம்மன் கோவில் தெருக்களில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற, தெருக்களின் ஓரங்களில் சிமென்ட் கால்வாய்கள் மற்றும் தரைப்பாலங்கள் சாலையோரம் அமைக்கப்பட்டு உள்ளன.
இப்பகுதி மழை நீர், இந்த கால்வாய் வழியாக, இந்த பகுதியில் உள்ள குளம் மற்றும் ஏரிகளில் செல்வது வழக்கம். தற்போது, கால்வாய்கள் கழிவு நீரால் நிரம்பியும், தரைப்பாலம் முழுதும் மண்ணால் துார்ந்தும் உள்ளதால், மழைக்காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாக, இப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மழைநீர் வடிகால்வாய் முழுதும் கழிவு நீர் நிரம்பி உள்ளதால், மழைக்காலங்களில் தெருக்களில் கழிவு நீர் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
சாலையில் செல்வோர் மீது, வாகனங்கள் தெருக்களில் தேங்கியுள்ள கழிவு நீரை வாரி இறைக்கின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் மற்றும் மழைநீர் கால்வாய்களை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.