/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயணியர் நிழற்குடையில்குடிநீர் வசதி அவசியம்
/
பயணியர் நிழற்குடையில்குடிநீர் வசதி அவசியம்
ADDED : டிச 07, 2024 01:01 AM
செங்கல்பட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பயணியர் நிழற்குடை பகுதியில், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சிகிச்சைக்காக தினமும் வந்து செல்கின்றனர்.
இம்மருத்துவமனை அருகில் சாலையின் இருபுறமும், பயணியர் நிழற்குடைகள் உள்ளன. இங்கு, நீண்ட நேரம் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருந்து, பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
இப்பகுதியில் குடிநீர் வசதியில்லாததால், தனியார் கடைகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே, முதியவர்கள், நோயாளிகள் நலன் கருதி, பயணியர் நிழற்குடையில் குடிநீர் வசதி ஏற்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.