/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அதிகாரிகள் மெத்தனத்தால் 10 நாட்களாக குடிநீர் வீண்
/
அதிகாரிகள் மெத்தனத்தால் 10 நாட்களாக குடிநீர் வீண்
ADDED : மார் 18, 2024 03:13 AM

சோழிங்கநல்லுார், : நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து, இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் குழாய் பதித்து, சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
சோழிங்கநல்லுார் வழியாக செல்லும் ஒரு குழாயில் சேதம் ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாக சாலையில் செல்கிறது. இந்த பிரச்னை, 10 நாட்களுக்கும் மேலாக உள்ளது.
ஒரு நாளைக்கு, 1 லட்சம் லிட்டருக்கு மேல் குடிநீர் வீணாவதாக கணிக்கப்படுகிறது. கோடைக்காலம் என்பதால், குடிநீர் அதிகமாக தேவைப்படும். இதை உணர்ந்து, குழாய் சேதத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒப்பந்தம் விட்டு தான் குழாய் சேதத்தை சீரமைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.

