/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெம்மேலி கடல்நீரில் குடிநீர் உற்பத்தி இன்று முழு உற்பத்திக்கு எதிர்பார்ப்பு

ADDED : மார் 17, 2024 01:56 AM
மாமல்லபுரம்:சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம், கடல்நீரில் இருந்து, தினமும் 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலையை, 1,516.82 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை அடுத்த, நெம்மேலியில் தற்போது அமைத்துள்ளது.
இந்த குடிநீர் உற்பத்தி ஆலையை, முதல்வர் ஸ்டாலின், கடந்த பிப்., 24ம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
ஆனால், துவக்கம் முதலே ஒரே நாளில், 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தியை துவக்க இயலாது. குழாயின் தன்மை, நீர் அழுத்தம் தாங்கும் திறன் உள்ளிட்டவற்றை முறையாக பரிசோதித்த பின்னே, முழு உற்பத்தி திறனை அடைய இயலும்.
இந்நிலையில், படிப்படியாக உற்பத்தியை அதிகரித்து, கடந்த 14ம் தேதி 12 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தியை அடைந்தது.
இதற்கிடையே, ஆலை வளாகத்தில், நேற்று முன்தினம் பிற்பகல் முதல் நேற்று காலை 2:00 மணி வரை உற்பத்தியை நிறுத்தி, பிரதான குடிநீர் உந்து குழாய்கள் இணைக்கும் பணிகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து, மீண்டும் உற்பத்தியை துவக்கிய நிலையில், இன்று முழு உற்பத்தி திறனான, 15 கோடி லிட்டர் உற்பத்தியை எதிர்பார்ப்பதாக, குடிநீர் வாரியத்தினர் தெரிவித்தனர்.