/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டி.ஜி.பி., ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டிய ஓட்டுநர் கைது
/
டி.ஜி.பி., ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டிய ஓட்டுநர் கைது
டி.ஜி.பி., ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டிய ஓட்டுநர் கைது
டி.ஜி.பி., ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டிய ஓட்டுநர் கைது
ADDED : ஜூலை 09, 2025 01:44 AM

சென்னை:டி.ஜி.பி., அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்து, அனைவரையும் கொல்லப்போவதாக, மதுபோதையில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
----------- சென்னை கிழக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணில், இம்மாதம், 5ம் தேதி அன்று, மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
அப்போது, டி.ஜி.பி., அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டியது மட்டுமின்றி, அவதுாறாக பேசியும் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து, மெரினா போலீசார் வழக்கு பதிந்து, மிரட்டல் விடுத்த நபரின் மொபைல் போன் எண்ணை வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த தவசிலிங்கம், 42 என்பவர், மதுபோதையில் மிரட்டல் விடுத்தது தெரிந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கைதான தவசிலிங்கம், சென்னை மதுரவாயல் பகுதியில் தங்கி லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மதுபோதைக்கு அடிமையானதால், மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
அவருடன் சேர்த்து வைக்கும்படி, மானாமதுரை எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். எஸ்.பி., அலுவலகத்தை தொடர்பு கொள்வதற்கு பதிலாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
'மனைவியுடன் சேர்த்து வைக்கவில்லை என்றால், அதிகாரி இருக்கும் இடத்தில் வெடிகுண்டு வைப்பேன்' என பேசியுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.