/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
3 பேர் மீது லாரி ஏற்றிய டிரைவருக்கு தர்ம அடி
/
3 பேர் மீது லாரி ஏற்றிய டிரைவருக்கு தர்ம அடி
ADDED : பிப் 02, 2025 12:26 AM
கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை அடுத்த, ஆர்.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ், 18, சந்தோஷ், 21, பிரவீன்குமார், 21. மூன்று பேரும், அருகில் அய்யர்கண்டிகை கிராமத்தில் உள்ள தனியார் கிடங்கில் சுமை துாக்கும் தொழிலாளராக, பகுதி நேர வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று காலை, கிடங்கில் லோடு ஏற்ற, ஹரியானா பதிவு எண் லாரி ஒன்று வந்தது.
அதன் டிரைவரான, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜூனைட், 30, என்பவருக்கும், மேற்கண்ட மூன்று பேருக்கும் இடையே, லோடு ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபம் அடைந்த லாரி டிரைவர், மூன்று பேர் மீதும் லாரியை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.
லாரியில் சிக்கி ஜெயராஜ், சந்தோஷ் ஆகியோரின் கால்கள் நசுங்கின. இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரவீன்குமார், லேசான காயம் அடைந்தார். சம்பவத்தை கண்ட சக தொழிலாளர்கள், லாரி டிரைவரை நையப்புடைத்தனர்.