/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 22, 2024 10:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, சாரணர் - சாரணியர் இயக்கத்தின் நிறுவனர் வேடன்பால் பிறந்தநாளை ஒட்டி, 'இயற்கையை பாதுகாப்போம், போதை பொருட்களை எதிர்ப்போம்' குறித்த விழிப்புணர்வை, செங்கல்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார்.
இந்த பேரணி, ஜி.எஸ்.டி., சாலையின் முக்கிய வீதி வழியாக சென்று, பள்ளி அருகே நிறைவடைந்தது. அதன்பின், கவர்னர் விருதுக்கு தேர்வு பெற்ற சாரணர் - சாரணியர் மற்றும் பள்ளிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.