/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
/
செங்கையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : ஜன 23, 2025 12:33 AM
செங்கல்பட்டு,
செங்கல்பட்டில், அரசு கலைக்கல்லுாரி தேசிய மாணவர் படையினர், போதைப் பொருளுக்கு எதிராக நேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரி தேசிய மாணவர் படையின் சார்பில், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், கூடுதல் கலெக்டர் அனாமிகா, நேற்று துவக்கி வைத்தார்.
இந்த பேரணி, ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்று, கல்லுாரி வளாகத்தில் முடிந்தது. அதன் பின், போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.