/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரம் அரசு பள்ளியில் புகுந்து இரவில் 'குடி' மகன்கள் அட்டகாசம்
/
நந்திவரம் அரசு பள்ளியில் புகுந்து இரவில் 'குடி' மகன்கள் அட்டகாசம்
நந்திவரம் அரசு பள்ளியில் புகுந்து இரவில் 'குடி' மகன்கள் அட்டகாசம்
நந்திவரம் அரசு பள்ளியில் புகுந்து இரவில் 'குடி' மகன்கள் அட்டகாசம்
ADDED : நவ 15, 2024 01:32 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சில நாட்களாக, இரவு நேரத்தில் மர்ம நபர்கள் புகுந்து, மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை உடைத்து, பள்ளி வளாகத்தை சீர்குலைத்து வந்தனர்.
நேற்று முன்தினம், ஒரு வகுப்பறையின் ஜன்னல்களை உடைத்து, டியூப் லைட்டுகள், சீலிங் பேன் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியுள்ளனர். மேலும், கம்ப்யூட்டர் அறையில் இருந்த கீ - போர்டு, மவுஸ் உள்ளிட்டவற்றை, கத்தியால் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.
பள்ளியின் நுழைவாயில் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து வரும் மின் இணைப்பையும் துண்டித்து, ஒயர்களை கழற்றி எடுத்து சென்றுள்ளனர்.
இது குறித்து, தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், நேற்று கூடுவாஞ்சேரி போலீசில் புகார் தெரிவித்தனர்.
அதன்படி, பள்ளி வந்து விசாரித்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.