/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுபோதையில் போலீசாரை தாக்கியவர் கைது
/
மதுபோதையில் போலீசாரை தாக்கியவர் கைது
ADDED : அக் 25, 2024 07:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மானாமதி ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில், ஒருவர் மது போதையில் தகராறு செய்ததாக தெரிகிறது.
இரவு ரோந்து பணியில் இருந்த மானாமதி காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் ரசூல், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார்.
அப்போது, அந்த நபர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே, அவரை காவல் நிலையம் அழைத்துசென்று விசாரித்தனர்.
அதில், அகரம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன், 38, என்பது தெரியவந்தது. இதையடுத்து, மானாமதி போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.