/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கள் விற்பனையாளர்களுக்கு டி.எஸ்.பி., எச்சரிக்கை
/
கள் விற்பனையாளர்களுக்கு டி.எஸ்.பி., எச்சரிக்கை
ADDED : ஜன 27, 2025 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர்,:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சில இடங்களில் சட்டவிரோதமாக கள் இறக்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து, மதுராந்தகம் டி.எஸ்.பி., மேகலா தலைமையிலான போலீசார், இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பனையூர், கப்பிவாக்கம், சேம்புலிபுரம் உள்ளிட்ட பகுதியில் ஆய்வு செய்து, சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு இருந்த கள் பானைகளை உடைத்தனர்.
இதையடுத்து, அப்பகுதி மக்களிடம், 'கள் இறக்கும் தொழில் மற்றும் கள் விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.எஸ்.பி., எச்சரிக்கை விடுத்தார்.