ADDED : அக் 12, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்பாக்கம்:அணுசக்தி துறையின்கீழ், கல்பாக்கத்தில் இயங்கும் அணுசக்தி நிறுவனங்களில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிகின்றனர்.
இவர்கள், ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு, துர்கா உற்சவம் கொண்டாடுவர். தற்போது, 28ம் ஆண்டாக கடந்த 9ம் தேதி முதல் கொண்டாடுகின்றனர்.
இங்குள்ள பெண்கள் விடுதியில், மகிஷாசூரனை வதம் செய்யும் துர்கா, சிவபெருமான், பார்வதி, விநாயகர் ஆகிய சுவாமியரை பிரதிஷ்டை செய்து, தினமும் காலை சிறப்பு வழிபாடு நடத்தி பிரசாதம், அன்னதானம் வழங்கினர்.