/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புழுதி பறக்கும் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி
/
புழுதி பறக்கும் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 03, 2025 12:31 AM
மறைமலை நகர்:அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களில் இருந்து நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால், பிற வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளி அருகில் பாலுார் - -சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை உள்ளது. இதில் தினமும் கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
தவிர கல் குவாரி கனரக வாகனங்களும் செல்கின்றன. இந்த சாலையில், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களில் இருந்து புழுதி பறப்பதால், பள்ளி மாணவ -- மாணவியர் அவதியடைந்து வருகின்றனர். கண் எரிச்சல், சுவாச பிரச்னை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, புழுதி பறப்பதற்கு காரணமாக உள்ள சாலை ஓர மண் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.