/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.30 லட்சம் இ - சிகரெட் பறிமுதல்
/
ரூ.30 லட்சம் இ - சிகரெட் பறிமுதல்
ADDED : ஜூலை 29, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை விமான நிலையத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான இ - சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாய் நகரில் இருந்து, இரு தினங்களுக்கு முன் சென்னை வந்த விமானத்தில், பயணியரின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்படவே உடைமைகளை பரிசோதித்தனர். இதில், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,400 இ - சிகரெட்டுகள் சிக்கின.