sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இ - சேவை மையம் துவக்கம்

/

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இ - சேவை மையம் துவக்கம்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இ - சேவை மையம் துவக்கம்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இ - சேவை மையம் துவக்கம்


ADDED : மே 16, 2025 02:17 AM

Google News

ADDED : மே 16, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட கட்டடத்தில், வட்டார இ -- சேவை மையம் துவக்கப்பட்டு உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்ட சேவைகளை,'ஆன்லைன்' வாயிலாக பெற, தமிழக மின்னாளுமை முகமை, தமிழக கேபிள்,'டிவி' நிறுவனம் ஆகியவை, அரசு இ- சேவை மையங்களை நடத்துகின்றன.

பிறப்பு, இறப்புச் சான்று, வாரிசு சான்று, குடும்ப அட்டை பதிவு செய்தல், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட பல்வேறு சேவைகளுக்கு, இங்கு விண்ணப்பம் செய்யலாம்.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள இ- - சேவை மைய கட்டடங்கள் பெரும்பாலும் பூட்டியே கிடப்பதால், பொதுமக்கள் நகர பகுதிகளில் செயல்படும் இ- - சேவை மையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அதனால் தற்போது, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட கட்டடத்தில், வட்டார இ - சேவை மையம் துவக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us