/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை
/
நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை
ADDED : பிப் 18, 2025 05:43 AM
சிங்கபெருமாள் கோவில் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சி வெண்பாக்கம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனாலும், கோடை காலங்களில் கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதால், கூடுதல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
15வது நிதிக்குழு மானியத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க, 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை வெண்பாக்கம் அரசு பள்ளி அருகில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை போடப்பட்டது. இதில் செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்று, கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.