/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பஞ்சமி நிலத்தை மீட்க கோரி இ.கம்யூ., போராட்டம்
/
பஞ்சமி நிலத்தை மீட்க கோரி இ.கம்யூ., போராட்டம்
ADDED : ஆக 01, 2025 01:16 AM

திருப்போரூர்:சிறுதாவூரில் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்க கோரி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் , திருப்போரூர் அருகே, போராட்டம் நடந்தது.
திருப்போரூர் அருகே சிறுதாவூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலத்தை மீட்டு, நிலத்தை இழந்தவர்களுக்கே வழங்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், திருப்போரூர், கருங்குழி பள்ளம் பகுதியில், நேற்று போராட்டம் நடந்தது.
கட்சியின் மாநில செயலர் சண்முகம் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், 450 பேர் பங்கேற்றனர்.
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்போரூர் தாசில்தார் சரவணனிடம், நிலத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் நிலங்களை வழங்க வேண்டும்.
நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம் விசாரணை ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை, போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.
பின், ஓ.எம்.ஆர்., சாலையில் கருங்குழி பள்ளம் பகுதியில், போராட்டக்காரர்கள் மறியல் செய்தனர்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 150 பேரை, திருப்போரூர் போலீசார் கைது செய்து, திருப்போரூர் தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.