/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இ.சி.ஆர்., சாலை சந்திப்புகளில் விபத்தை தவிர்க்க தடுப்புகள்
/
இ.சி.ஆர்., சாலை சந்திப்புகளில் விபத்தை தவிர்க்க தடுப்புகள்
இ.சி.ஆர்., சாலை சந்திப்புகளில் விபத்தை தவிர்க்க தடுப்புகள்
இ.சி.ஆர்., சாலை சந்திப்புகளில் விபத்தை தவிர்க்க தடுப்புகள்
ADDED : ஜன 05, 2025 01:19 AM

மாமல்லபுரம்:கிழக்கு கடற்கரை சாலையில், கிராம சாலைகள் சந்திப்பு பகுதிகளில் விபத்து அபாயம் தவிர்க்க, சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டன.
சென்னை - மாமல்லபுரம் இடையே, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன கட்டுப்பாட்டில், கிழக்கு கடற்கரை சாலை உள்ளது.
இச்சாலை வழியே, தொலைதுார வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இதுமட்டுமின்றி, வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில், சென்னை பகுதிகளில் இருந்து, மாமல்லபுரத்திற்கு, சுற்றுலா பயணியர் வாகனங்களும் படையெடுக்கின்றன.
வாகன ஓட்டுனர்கள், போக்குவரத்து விதிமுறைகளை அலட்சியப்படுத்தி, அதிவேகமாக ஓட்டுகின்றனர். இதனால், மாமல்லபுரம் - கோவளம் இடையே, இச்சாலையில் உள்ளூர் சாலை இணையும் சந்திப்பு உள்ள சாலவான்குப்பம், பட்டிபுலம், கிருஷ்ணன்காரணை, சூலேரிக்காடு, பேரூர், நெம்மேலி ஆகிய பகுதிகளில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
பலர் உயிரிழந்தும் உள்ளனர். எனவே, விபத்து அபாயம் தவிர்க்க, சந்திப்பு பகுதிகளில் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், சாலை தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர்.

