/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பசுமையாக மாறும் இ.சி.ஆர்., மைய பகுதி
/
பசுமையாக மாறும் இ.சி.ஆர்., மைய பகுதி
ADDED : டிச 04, 2024 11:14 PM

சென்னை, சென்னையின் முக்கிய சாலையான இ.சி.ஆர்., சாலையை, திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10 கி.மீ., துாரம், ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணி, இறுதிக்கட்டத்தில் உள்ளது.
சாலை மையத்தடுப்பு, 1 அடி அகலத்தில் இருந்து, தற்போது செடிகள் நடும் வகையில், 4 அடி அகலமாக மாற்றப்பட்டது.
இதில், 2.5 அடி அகலம், 3 அடி ஆழத்தில், அழகும், பசுமையுமான ஆறு வகையான, 500 செடிகள் நடப்படுகின்றன.
ஒன்றரை அடி உயரத்திற்கு இயற்கை உரமும், 1 அடி உயரத்திற்கு செம்மண் கலந்த உரமும் போடப்படுகிறது.
தண்ணீர் ஊற்றி பராமரிக்க அரை அடி விடப்பட்டுள்ளது. தற்போது, நடைபெறும் பணிக்கு, 20,000 கிலோ இயற்கை உரம், 20,000 கிலோ செம்மண் கலந்த உரம் பயன்படுத்தப்படுகிறது.
முதற்கட்டமாக, 800 மீட்டர் நீளத்தில் செடிகள் நடப்படுகின்றன. பராமரிப்பு பணிகளை மாநகராட்சி செய்யும்.
இதனால், வாகனப் புகையால் ஏற்படும் மாசு குறைவதுடன், இது பசுமை சாலையாகவும் காணப்படும்.