/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய நெடுஞ்சாலை புதிய பாதையில் இ.சி.ஆர்., குறுகிய வளைவுகள் தவிர்ப்பு
/
தேசிய நெடுஞ்சாலை புதிய பாதையில் இ.சி.ஆர்., குறுகிய வளைவுகள் தவிர்ப்பு
தேசிய நெடுஞ்சாலை புதிய பாதையில் இ.சி.ஆர்., குறுகிய வளைவுகள் தவிர்ப்பு
தேசிய நெடுஞ்சாலை புதிய பாதையில் இ.சி.ஆர்., குறுகிய வளைவுகள் தவிர்ப்பு
ADDED : அக் 30, 2024 10:06 PM

மாமல்லபுரம்:புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, கூவத்துார் பகுதியில், முந்தைய குறுகிய வளைவுகள் அபாய சாலையை தவிர்த்து, வேறிடத்தில் நேர்வழியாக அமைக்கப்படுகிறது.
சென்னை - புதுச்சேரி இடையே, முந்தைய கிழக்கு கடற்கரை சாலை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன தடமாக நிர்வகிக்கப்பட்டது. இத்தடத்தில், மாமல்லபுரம் - புதுச்சேரி, 95 கி.மீ., பகுதியை, 2018ல் தேசிய நெடுஞ்சாலையாக, மத்திய அரசு மாற்றியது.
தற்போது மூன்று பிரிவுகளாக, 1,250 கோடி ரூபாய் செலவில் நான்குவழிப் பாதையாக விரிவுபடுத்தி மேம்படுத்துகிறது.
முதல்கட்ட விரிவாக்கம், மாமல்லபுரம் - முகையூர் இடையே, 32 கி.மீ., நீளத்திற்கு நடக்கிறது.
வேப்பஞ்சேரி, காத்தங்கடை, அடையாளச்சேரி, கூவத்துார் ஆகிய பகுதிகள் வழியே, முந்தைய கிழக்கு கடற்கரை சாலை கடந்தது.
இப்பகுதியில் உள்ள குறுகிய அபாய வளைவுகளால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு அதிகரித்தது. விபத்தை தவிர்க்க கருதி, பழைய சாலையில் நீண்டதுாரம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
அதற்கு மாற்றாக, பாலாற்று பாலம் ஒட்டியுள்ள வேப்பஞ்சேரி பகுதியிலிருந்து கடலுார், கீழார்கொல்லை, கானத்துார் வழியே, கொடபட்டினம் வரை, பழைய சாலைக்கு சற்றுத்துாரத்தில் கிழக்கு பகுதியில், முற்றிலும் புதிய நேர்வழிச் சாலையாக அமைக்கப்படுகிறது.