/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இ.சி.ஆர்., சாலையில் மண் குவியல்
/
இ.சி.ஆர்., சாலையில் மண் குவியல்
ADDED : அக் 12, 2024 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த பேரூர் பகுதியில், சென்னை குடிநீர் வாரியத்தின்கீழ், கடல்நீரில் குடிநீர் உற்பத்தி செய்யும் புதிய ஆலை அமைக்கப்படுகிறது. அதன் கட்டுமான பணிகள் தற்போது நடக்கிறது.
கடலோர மணற்பரப்பை சமன்செய்து, ஏரியில் இருந்து எடுக்கப்படும் கிராவல் மண்ணை நிரப்பி, நிலமட்டம் உயர்த்தப்படுகிறது.
மாமல்லபுரம் பூஞ்சேரி ஏரியிலிருந்து, டாரஸ் லாரிகளில் மண் கொண்டு செல்லப்படுகிறது. ஆலை வளாக நுழைவாயில் பகுதி அருகில், லாரிகளிலிருந்து சிதறும் கிராவல் மண், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் தடத்தில் குவிந்து, கரடுமுரடாக உள்ளது. மழை பெய்தால், சேறு சகதியாக மாறுகிறது.