/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேதகிரீஸ்வரர் கோவிலில் நவ.,7ல் ஏகதின லட்சார்ச்சனை
/
வேதகிரீஸ்வரர் கோவிலில் நவ.,7ல் ஏகதின லட்சார்ச்சனை
ADDED : நவ 01, 2024 08:25 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், வரும் 7ம் தேதி நடக்கும் கந்தசஷ்டி ஏகதின லட்சார்ச்சனையில் பங்கேற்க, பக்தர்கள், தலா 150 ரூபாய் கட்டணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெறுமாறு, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் முருகபெருமான், தனி சன்னிதியில் ஆறுமுகசுவாமியாக வீற்று அருள்பாலிக்கிறார்.
அவருக்கு கந்தசஷ்டி உற்சவம், இன்று துவங்கி, வரும் 7ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, தினசரி காலை, மாலை, உபயதாரர்கள் வாயிலாக, ஆறுமுகசுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.
ஏகதின லட்சார்ச்சனை, 7ம் தேதி காலை 8:00 மணிக்கு துவங்கி, இரவு 8:30 மணி வரை நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், தலா 150 ரூபாய் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெறுமாறு, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், 8ம் தேதி மாலை, அவருக்கு சந்தனகாப்பு சாற்றி, 9ம் தேதி காலை பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.