/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இளம்பெண்ணிடம் சில்மிஷம் முதியவர் கைது
/
இளம்பெண்ணிடம் சில்மிஷம் முதியவர் கைது
ADDED : செப் 14, 2025 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜமங்கலம்: கொளத்துார் காவல் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், கடந்த 8ம் தேதி வீட்டின் அருகே தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் ராமதாஸ், 62, என்பவர், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ராஜமங்கலம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார்.
மூன்று மாதத்திற்கு முன், ஒருநாள் அப்பெண்ணிடம் ராமதாஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பெண் எச்சரித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் சில்மிஷத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.