/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'புல்லட்'டை குறிவைத்து திருடிய முதியவர் கைது
/
'புல்லட்'டை குறிவைத்து திருடிய முதியவர் கைது
ADDED : மே 25, 2025 08:05 PM
குரோம்பேட்டை:சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 36. கடந்த ஏப்., 22ம் தேதி, குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடைக்கு, 'என்பீல்ட் புல்லட்' வாகனத்தில் சென்றார். வாகனத்தை பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது, புல்லட் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து, குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், டிப்-டாப் உடை அணிந்து வந்த வயதான நபர், புல்லட் வாகனத்தை திருடி சென்றது பதிவாகியிருந்தது.
தொடர்ந்து, அந்த நபரின் புகைப்படங்களை, அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி, விசாரணை நடத்தியதில், ஈக்காட்டுத்தாங்கல், அம்பாள் நகரை சுரேஷ் ராஜன், 55, என்பவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், ஐந்து வருடத்திற்கு முன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சுரேஷ் ராஜன், இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின், இருசக்கர வாகனங்களை திருடி விற்பதில் இறங்கியுள்ளார். அவரிடமிருந்து நான்கு புல்லட் வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.