ADDED : செப் 28, 2025 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:பைக் திருடிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு நகர பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம், 45. நேற்று முன்தினம் இரவு தன் வீட்டின் வெளியே ஹீரோ ஸ்பிளென்டர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்தார். இதை பார்த்த இப்ராஹிம் முதியவரை பிடித்து செங்கல்பட்டு நகர போலீசாரிடம் ஒப்படைத்தார்.
முதியவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சாகுல் பாட்ஷா, 65, என்பதும் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரிய வந்தது. சாகுல் பாட்ஷாவிடமிருந்து ஹீரோ ஸ்பிளண்டர், பேஷன் ப்ரோ உள்ளிட்ட ஐந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.