/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வடிகால்வாயில் விழுந்து முதியவர் இறப்பு
/
வடிகால்வாயில் விழுந்து முதியவர் இறப்பு
ADDED : அக் 06, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம், மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து, முதியவர் இறந்தார்.
திருக்கழுக்குன்றம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் சுகுமார், 50. திருமணமாகாத இவர், சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக, அவரை காணவில்லை. நேற்று பிற்பகல், அவரது வீட்டிற்கு அருகில், மழைநீர் வடிகால்வாயிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
அங்கிருந்தோர் கால்வாயில் பார்த்த போது, சுகுமாரின் அழுகிய சடலம் கிடந்தது. தகவலறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார், அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.