/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கேளம்பாக்கம் அருகே தங்கும் விடுதியில் தீ விபத்து
/
கேளம்பாக்கம் அருகே தங்கும் விடுதியில் தீ விபத்து
ADDED : அக் 06, 2025 11:30 PM

திருப்போரூர், கேளம்பாக்கம் அருகே, தங்கும் விடுதியில் தீப்பற்றி, மூன்று அறைகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.
கேளம்பாக்கம் அருகே நாவலுாரில், தனியார் தங்கும் விடுதி உள்ளது.
இந்த விடுதியில், 20க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இதில், மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் பொறியாளர்கள் தங்கி உள்ளனர்.
நேற்று பகல் 1:00 மணியளவில், முதல் மாடியில் இருந்த ஒரு அறையின் குளியலறையில்,'வாட்டர் ஹீட்டரில்' மின் கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி எரிந்துள்ளது. தகவல் அறிந்து வந்த சிறுசேரி தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்தனர்.
தீ முழுதும் அணைக்கப்பட்ட பின் உள்ளே சென்று பார்த்த போது, மூன்று அறைகளிலும் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகி இருந்தன.
இதுகுறித்து, தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.