/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்கூட்டர் விபத்து முதியவர் பலி
/
ஸ்கூட்டர் விபத்து முதியவர் பலி
ADDED : ஜன 01, 2025 08:05 PM
மறைமலைநகர்:செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 50; செங்கல்பட்டு பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, தன் டி.வி.எஸ்.,- எக்ஸ்.எல்., ஸ்கூட்டரில் வீட்டிற்கு கிளம்பினார். செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில், ஆத்துார் அருகில் வந்த போது, சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாய் மீது ஸ்கூட்டர் மோதியது. இதில், ரமேஷ் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், ரமேஷ் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.