/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது ஸ்கூட்டரில் சென்ற முதியவர் மர்ம வாகனம் மோதி பலி
/
பொது ஸ்கூட்டரில் சென்ற முதியவர் மர்ம வாகனம் மோதி பலி
பொது ஸ்கூட்டரில் சென்ற முதியவர் மர்ம வாகனம் மோதி பலி
பொது ஸ்கூட்டரில் சென்ற முதியவர் மர்ம வாகனம் மோதி பலி
ADDED : ஏப் 20, 2025 08:37 PM
சித்தாமூர்:நல்லாமூர் கிராமத்தில், இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்று வீடு திரும்பிய முதியவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்
சித்தாமூர் அடுத்த சாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லன், 64. இவர் நேற்று மதியம் 12:00 மணியளவில், மாதாந்திர ரத்த அழுத்த நோய் மாத்திரை பெற, 'டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., ஸ்கூட்டரில், நல்லாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, பின் வீடு திரும்பினார்.
நல்லாமூர் சாய்பாபா கோவில் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், செல்லன் பலத்த காயமடைந்தார்.
அங்கிருந்தோர் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக நல்லாமூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பினர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குஇ, சிகிச்சை பலனின்றி செல்லன் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து, சித்தாமூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

