/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண்ணை எரித்து கொன்ற வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை
/
பெண்ணை எரித்து கொன்ற வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை
பெண்ணை எரித்து கொன்ற வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை
பெண்ணை எரித்து கொன்ற வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜன 10, 2025 02:23 AM

செங்கல்பட்டு:புதுப்பாக்கத்தில், பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில், முதிவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.
திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 44. இவரது மனைவி சுகன்யா, 38. வெங்கடேசன் மலேஷியாவில் தங்கி வேலை செய்த நிலையில், சுகன்யா புதுப்பாக்கத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தினார்.
பக்கத்தில் கடை வைத்திருந்த குமார், 56, என்பவர், சுகன்யாவிற்கு உதவிகள் செய்து வந்துள்ளார். இதை, மற்ற கடைக்காரர்கள் தவறாக பேசியதால், குமாரிடம் பேசுவதை சுகன்யா நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குமார், கடந்த 2022ம் ஆண்டு, சுகன்யாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார்.
இதுகுறித்து, கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குமாருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பளித்தார்.
அதன் பின், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

