/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டில் விபத்தில் முதியவர் படுகாயம்
/
செங்கல்பட்டில் விபத்தில் முதியவர் படுகாயம்
ADDED : பிப் 07, 2025 12:20 AM
செங்கல்பட்டுசெங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல்,59.
இவர், நேற்று முன்தினம் இரவு, தன் 'புல்லட்' பைக்கில், செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் உள்ள திருமண்டபத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு சென்றார்.
நேற்று நள்ளிரவு 1:30 மணியளவில் வீடு திரும்பிய முருகவேல், செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில், செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலை எதிரே வரும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
சக வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.